Posts

Ilanji Arulmigu Swamy Sri Sadaiudayar Sastha

தென்காசி மாவட்டம்‌ ‌, குற்றாலம்‌ அருகிலுள்ள இயற்கை எழில்‌ கொஞ்சும்‌ நகரம்‌ இலஞ்சி.  தென்றல் தவழும்‌ இந்நகரின்‌ தென்கிழக்கில்‌ சிற்றாற்று நதிக்கரையில்‌ அமைந்துள்ள ஆலயம்‌ ஸ்ரீ சடையுடையார்‌ சாஸ்தா ஆலயம்‌. இது மிகவும்  வரலாற்றுச்‌ சிறப்பு உடையது. தொன்மை வாய்ந்தது. இங்கு கோவில் கொண்டுள்ள சடையுடையார்‌ சாஸ்தா தன்னை நாடிவரும்‌ பக்தர்களுக்கு அருள்பாலித்து, காத்து வருகிறார்‌. மகா கணபதி, தேவி சிற்றாற்று வீரியம்மன்‌, பிரமராட்சி அம்மன்‌, பேச்சியம்மன்‌, ஆதிபேச்சியம்மன்‌, சுடலைமாடசாமி, சின்னத்தம்பி, சேலைக்காரி அம்மன்‌ மற்றும்‌ பரிவார தேவதைகளும்‌ அடியவர்களைக்‌ காத்து அருள்புரிந்து வருகின்றனர்‌. அன்பர்களின்‌ வேண்டுதல்களை கனிவுடன்‌ நிறைவேற்றி வருகிறார்‌ சடையுடையார்‌. இவர் தன்னை நம்பிக்கையுடன்‌ நாடி வரும்‌ பக்தர்களின்‌ எண்ணங்களை நிறைவேற்றி துயர்‌ நீக்கி, செல்வ வளம்‌ பெருக்கி குறைகளைப்‌ போக்கி அருள்புரிகிறார்‌. இத்திருக்கோயில்‌ மிகவும்‌ பழமைவாய்ந்தது. கிட்டத்தட்ட  150  ஆண்டுகளுக்கு  முன்பு நிறுவப்பட்டதாகத்‌ தெரியப்‌படுகிறது  1942-ல்‌ மண்டபம்‌, மற்றும்‌ காம்பவுண்டு சுவர்‌ கட்டப...
Recent posts