தென்காசி மாவட்டம் , குற்றாலம் அருகிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் நகரம் இலஞ்சி. தென்றல் தவழும் இந்நகரின் தென்கிழக்கில் சிற்றாற்று நதிக்கரையில் அமைந்துள்ள ஆலயம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா ஆலயம். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு உடையது. தொன்மை வாய்ந்தது. இங்கு கோவில் கொண்டுள்ள சடையுடையார் சாஸ்தா தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து, காத்து வருகிறார். மகா கணபதி, தேவி சிற்றாற்று வீரியம்மன், பிரமராட்சி அம்மன், பேச்சியம்மன், ஆதிபேச்சியம்மன், சுடலைமாடசாமி, சின்னத்தம்பி, சேலைக்காரி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளும் அடியவர்களைக் காத்து அருள்புரிந்து வருகின்றனர்.
அன்பர்களின் வேண்டுதல்களை கனிவுடன் நிறைவேற்றி வருகிறார் சடையுடையார். இவர் தன்னை நம்பிக்கையுடன் நாடி வரும் பக்தர்களின் எண்ணங்களை நிறைவேற்றி துயர் நீக்கி, செல்வ வளம் பெருக்கி குறைகளைப் போக்கி அருள்புரிகிறார்.
இத்திருக்கோயில் மிகவும் பழமைவாய்ந்தது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகத் தெரியப்படுகிறது 1942-ல் மண்டபம், மற்றும் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டது அதன் பிறகு 1177-ம் ஆண்டு ஆனி மாதம் 13-ம் தேதி 2008 முதல் முறையாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பெற்றது.
அதன்பிறகு 1191-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 இல் (26-10-2015) திங்கட்கிழமை அன்று காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் (இரண்டாவது) அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Comments
Post a Comment